மதுரையில் பலத்த மழை

மதுரையில் நேற்று திடீரென்று பலத்த மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-04-10 20:25 GMT
மதுரை,

மதுரையில் நேற்று திடீரென்று பலத்த மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரையில் பலத்த மழை

மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. கடும் வெயில் காரணமாக சாலைகளில் நடமாடிய பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. இதனால் ஒரளவு வெப்பம் தணிந்தது. ஆனால் நேற்று காலை வழக்கம் போல வெயில் சுட்டெரித்தது. பின்னர் மதியம் 12.30 மணிக்கு மேல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதன்பின்னர் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல, செல்ல அது பலத்த மழையாக பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை பெய்து இருக்கும். 
அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் மதியம் 2 மணிக்கு மேல் லேசான மழை பெய்தது. தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் ேகாடை வெப்பம் தணிந்தது. இந்த மழையின் காரணமாக ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் ெபாதுமக்கள் கோடை வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

4 மின்கம்பங்கள் விழுந்தன

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.இதில் அந்த கிராமத்தில் 4 மின்கம்பங்கள் ஒடிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு விக்கிரமங்கலம் மின் உதவி பொறியாளர் குணசேகரன் மற்றும் பணியாளர்கள் சென்று ஒடிந்து விழுந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி மின்சப்ளை கொடுத்தனர். நேற்று காலை ஒடிந்து விழுந்த 4 மின்கம்பங்களுக்கு பதிலாக புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டு மின்சப்ளை கொடுத்தனர். நேற்று பிற்பகலில் லேசான மழை பெய்தது.
பேரையூரில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையினால் பேரையூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் உள்ள வேப்பமரம் அடியோடு சாய்ந்து அருகிலுள்ள மின்மாற்றி விழுந்தது. இதனால் மின்மாற்றி மரத்தினுடைய பாரம் தாங்க முடியாமல் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த நேரத்தில் சாலையில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்