கோவில்களில் ராமநவமி வழிபாடு
ராமநவமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
நெல்லை:
ராமநவமியான நேற்று நெல்லையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நெல்லை அருகன்குளம் காட்டுராமர் கோவில் நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. மேலும் கோவில் முன்பு அமைந்துள்ள வளாகத்தில் மாணவிகளின் பரத நாட்டிய கலைநிகழ்ச்சி நடந்தது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் நெல்லை வண்ணார்பேட்டை இஸ்கான் கோவிலிலும் ராமநவமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணிக்கு தனுசு ஏந்தி ராமர், லட்சுணர் அலங்காரத்தில் சுவாமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.