அரியலூர் நகர வணிகர் சங்கம் சார்பில் அமைச்சர் சிவசங்கருக்கு வரவேற்பு
அரியலூர் நகர வணிகர் சங்கம் சார்பில் அமைச்சர் சிவசங்கருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். கடந்த மாதம் மந்திரிசபை மாற்றத்தின்போது சிவசங்கர் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவருக்கு முதன்முதலாக தமிழக அமைச்சரவையில் இடம் கொடுத்ததற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், அரியலூர் நகர வணிகர்கள் சங்கம் சார்பில் அரியலூர் அமைச்சர் சிவசங்கர் வரும்போது அவருக்கு வரவேற்பு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று அரியலூரில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்திற்கு அமைச்சர் சிவசங்கர் வந்த போது நகர வணிகர் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுத்து சால்வை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏ.பி.என். ஜவுளி ஸ்டோர் சுதாகர், கண்ணன் ஜவுளி ஸ்டோர் செல்வம், எஸ்.சி.எஸ். ஜுவல்லர்ஸ் ஸ்ரீராம், கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமுதன், நேஷனல் சூப்பர் மார்க்கெட் அப்துல்ரகுமான், கோல்டன் கேட் குளோபல் பள்ளி தண்டபாணி, ஐஸ்வர்யம் தங்கமாளிகை விக்னேஸ்வரன், அரியலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் நல சங்க தலைவர் கோபிநாதன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் மாரிமுத்து, சகானா டிராவல்ஸ் காமராஜ், வணிகர் சங்க செயலாளர் பாரி, பாண்டுரங்கன், கிருஷ்ணகுமார், ராஜா, அரியலூர் மாவட்ட அரசு கேபிள் ஆபரேட்டர் சங்க தலைவர் ஜார்ஜ் உள்பட வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.