கஞ்சா விற்றவர் கைது

சேலம் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-10 20:08 GMT
கொண்டலாம்பட்டி:-
சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் நாட்டாமங்கலம் பிரிவு ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். 
அப்போது அந்த பகுதியில் சேலம் அமானி கொண்டலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 50) என்பவரை கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்