கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்
எடப்பாடியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
எடப்பாடி:-
எடப்பாடியில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பஸ் நிலையத்தில் இருந்து, நைனாம்பட்டி, வெள்ளாண்டிவலசு, காந்திசிலை முக்கிய வீதிகள் வழியாக தூய செல்வநாயகி அன்னை ஆலயம் வரை குருத்தோலை ஊர்வலம் பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி பங்கு தந்தைகள் ஸ்டீபன், கார்த்திக், கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.