பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வீரகனூரில் பெரிய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-04-10 20:07 GMT
தலைவாசல்:-
தலைவாசல் அருகே வீரகனூர் சுவேத நதிகரையில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோபுர கலசம் மீதும், பெரியநாயகி அம்மன் மற்றும் மதுரை வீரன், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் தெளித்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்