மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ஆத்தூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். மனைவி, மகள் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-04-10 20:07 GMT
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டி கிராமம் செங்குட்டை தெற்கு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 58), விவசாயி. நேற்று மதியம் இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தனது மனைவி லட்சுமி (50) மற்றும் இளைய மகள் உஷா (19) ஆகியோருடன் சேர்ந்து மரவள்ளிக்கிழங்கு பயிர் குச்சி நடவு செய்தார்.
அப்போது விவசாய நிலத்தில் ஏர் கம்ப்ரசர் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருந்தது. மோட்டாரில் இருந்த பைப் மூலம் மின்சாரம் கசிந்து மாணிக்கம் கையில் வைத்திருந்த இரும்பு கம்பி மீது எதிர்பாராதவிதமாக தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற மனைவி லட்சுமி கையில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் மல்லியக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், விநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி-மகள் கண் எதிரே விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மின்சாரம் தாக்கி இறந்த மாணிக்கத்துக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

மேலும் செய்திகள்