குமரிக்கு ரெயில் மூலம் 629 டன் உரம் வந்தது

குமரிக்கு ரெயில் மூலம் 629 டன் உரம் வந்தது;

Update: 2022-04-10 19:57 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுபோக தென்னை, வாழை, மரவள்ளி கிழங்கு மற்றும் ரப்பர் உள்ளிட்ட சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் குமரி மாவட்டத்தில் சமீப காலமாக விவசாயத்திற்கு தேவையான யூரியா, பாக்டம்பாஸ் போன்ற உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக யூரியா உரம் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து குமரி மாவட்டத்திற்கு உரங்களை இறக்குமதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கொச்சியில் இருந்து சரக்கு ரெயில் மூலமாக 629 டன் பாக்டம்பாஸ் உரம் நேற்று நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயிலில் வந்த உரத்தை லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த உரத்தை கூட்டுறவுச் சங்கங்களுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு சப்ளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
-----------

மேலும் செய்திகள்