பருத்தி செடியில் நோய் தாக்குதல்

வத்திராயிருப்பு பகுதியில் பருத்தி செடியில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2022-04-10 19:54 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் பருத்தி செடியில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
பருத்தி சாகுபடி 
வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், கோட்டையூர், இலந்தைகுளம், தம்பிபட்டி, சேஷபுரம், வ.மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி ெசய்யப்பட்டுள்ளது.  
கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் பருத்தியை சாகுபடி செய்தனர். 
இந்த பருத்தியானது தற்போது நன்கு வளர்ந்து பூக்கள் பூக்க ஆரம்பித்து விட்டன. 
நிவாரணத்தொகை 
இந்தநிலையில் பருத்தி செடியில் வேர் நோய் தாக்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த நோய்க்கு விவசாயிகள் தகுந்த உரம் விட்டாலும் நோய் கட்டுப்பாடு ஆக வில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
எனவே சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் பருத்தியை ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்