வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி வழிபாடு

வரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-04-10 19:41 GMT
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ராம நவமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராம நவமியை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. வரதராஜ பெருமாளுக்கு ராமர் அலங்காரமும், பெருந்தேவி தாயாருக்கு சீதாபிராட்டி அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். ராமருக்கு மிகவும் பிடித்தமான நீர்மோர், பானகம், பருப்பு வடை ஆகியவை நிவேதனம் செய்யப் பட்டது. பின்னர் நம்பெருமானுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் ராமரை நோக்கி பல்வேறு துதிகள் பாடப்பட்டன. மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்