பயணிகள் ெரயிலில் 14 கிலோ கஞ்சா சிக்கியது
விருதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ரெயிலில் 14 கிலோ கஞ்சா சிக்கியது.
விருதுநகர்,
விருதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ரெயிலில் 14 கிலோ கஞ்சா சிக்கியது.
உத்தரவு
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க ெரயில் நிலையங்களிலும், ஓடும் ெரயில்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளுமாறு ெரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து ெரயில்வே போலீசார் போதைப் பொருள் தடுப்பு தனிப்படை அமைத்து போதைப்பொருள் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சண்டிகரில் இருந்து மதுரை வந்த ெரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கஞ்சா பறிமுதல்
அந்த ெரயிலில் வந்த ஒரு பயணி கோவை- நாகர்கோவில் பயணிகள் ெரயிலில் மாறி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து விருதுநகர் ெரயில் நிலையத்தில் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன் தலைமையில் கோவை-நாகர்கோவில் பயணிகள் ெரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவில்லாத ெரயில் பெட்டியில் இருந்த ஒரு பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 14 கிலோ கஞ்சா சிக்கியது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அதை கொண்டு வந்த கடலூர் மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியசெல்வபாரத் (வயது 33) என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
எங்கிருந்து கஞ்சா கடத்தப்படுகிறது? வேறு கஞ்சா கடத்தல் கும்பல் ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.