வேன் மோதி கல்லூரி மாணவர் சாவு

வேன் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.;

Update: 2022-04-10 19:32 GMT
கரூர், 
கரூர் வாங்கல் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 18). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வந்தார். இந்தநிலையில் இவர் தனது நண்பரான கோபி (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வாங்கல்-மோகனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கோபி ஓட்டினார். வாங்கல் காவிரி ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கோபியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு வாங்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாங்கல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் தீபக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்