தேசிய அளவிலான நீச்சல் போட்டி பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு பாராட்டு
தேசிய அளவிலான நீச்சல் போட்டி பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர்
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் நடந்து முடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டிற்காக பங்கேற்ற பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேட்டை சேர்ந்த அம்பிகா தலா 2 தங்க பதக்கங்களையும், வெள்ளி பதக்கங்களையும், பெரம்பலூர் தாலுகா மேலப்புலியூரை சேர்ந்த கலைச்செல்வன் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். அவர்களுக்கு சக மாற்றுத்திறனாளி வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலவாழ்வு சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.