சாலையில் ரேஷன் அரிசியை கொட்டி போராட்டம் நடத்திய தொழிலாளி

விக்கிரமசிங்கபுரம் அருகே சாலையில் ரேஷன் அரிசியை கொட்டி தொழிலாளி போராட்டம் நடத்தினார்.

Update: 2022-04-10 19:20 GMT
விக்கிரமசிங்கபுரம்;
விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் காமராஜர்நகரை சேர்ந்தவர் துரை. கூலி தொழிலாளி. இவர் சிவந்திபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கச் சென்றார். அவர் வாங்கிய ரேஷன் அரிசி, தரமற்ற நிலையில் பழுப்பு நிறத்தில் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து ரேஷன் கடையில் கேட்டபோது, வேண்டுமென்றால் வாங்கி செல்லுங்கள் என்று கடைக்காரர் பதிலளித்துள்ளார். இதனால் மனமுடைந்த இவர் ரேஷன் கடையில் தான் வாங்கிய அரிசியை, சிவந்திபுரத்தில் சாலையின் நடுவே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய துரையை அழைத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்