அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது
வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராகிம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் சோதனை செய்தார். அப்போது சூரார்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த பால்ராஜ் (வயது52), வெம்பக்கோட்டை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோட்டையூரில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த முனீஸ்வரன் (40) ரவிச்சந்திரன் (45), தங்கராஜ் (50) கிருஷ்ணசாமி (60) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.