கோவில்பாளையம் இரும்பு கடையில் செல்போன் திருடிய அண்ணன் தம்பி கைது
கோவில்பாளையம் இரும்பு கடையில் செல்போன் திருடிய அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம், சேரன்நகரை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). இவர் அங்கு இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் பொள்ளாச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் செல்போனை திருடிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் அந்த சிறுவனை மட்டும் போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அவர்களை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓட முயன்றனர்.
உடனே போலீசார் அந்த 2 பேரையும் துரத்திச்ெசன்று பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கார்த்தி (வயது 28), கவுதம் (19) என்பதும், காளிதாஸ் கடையில் இருந்து செல்போன் திருடிய வழக்கில் தப்பி ஓடியவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்தனர். அண்ணன், தம்பியான இவர்கள் மீது ஏற்கனவே பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, காமநாயக்கன்பாளையம், நெகமம், சுற்று வட்டாபகுதிகளில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.