எருமப்பட்டியில் குட்கா விற்ற லாரி டிரைவர் கைது
எருமப்பட்டியில் குட்கா விற்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 31). லாரி டிரைவர். இவர் வெளிமாநிலங்களுக்கு லாரிகளை ஓட்டி செல்லும் போது அங்கிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை வாங்கி வருவதாகவும், அதனை எருமப்பட்டியில் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில் எருமப்பட்டி போலீசார் சோதனை செய்தபோது அவர் குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தடை செய்யப்பட்ட குட்காவையும் பறிமுதல் செய்தனர்.