கொல்லிமலையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கொல்லிமலையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-10 18:12 GMT
நாமக்கல்:
கொல்லிமலை சிங்களம்கோம்பை பகுதியில் மரம் ஒன்றில் முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தை மீட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் எருமப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி துரைசாமி (வயது 72) என்பதும், குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விவசாயி துரைசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்