ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
விழுப்புரத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரம்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு பொதுத்தேர்வை ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து, மே மாதம் கோடை விடுமுறை விட பரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.