சிதம்பரம் வழியாக ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
சிதம்பரம் வழியாக ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.
சிதம்பரம்,
சிதம்பரம் இருப்புபாதை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், ரவிச்சந்திரன், தலைமை காவலர் பாஸ்கர் ஆகியோர் சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்த புவனேஸ்வர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ரெயிலில் ஒரு பெட்டியில், சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதை போலீசார் பிரித்து பார்த்த போது, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
இதையடுத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக ரெயிலில் வந்த பீகார் மாநிலம் மாநிலம் கிழக்கு ஜம்பரான் மாவட்டம், குமர்பனா கிராமத்தை சேர்ந்த அலாவுதீன் மகன் ஜம்ஷிடுஅலாம் (வயது 24) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 12½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஜம்ஷிடுஅலாம் கொத்தனார் என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு அவர் புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது.