மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-04-10 17:40 GMT
மயிலம், 

மயிலம் அருகே டி.கேணிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கிரிதரன் (வயது 29). அதே ஊரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரத்தின் மகன் ரவிவர்மன்(18). இவர் பிளஸ்-2முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு 7 மணிக்கு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கேணிப்பட்டில் இருந்து கூட்டேரிப்பட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். 
மோட்டார் சைக்கிளை கிரிதரன் ஓட்டினார். கன்னிகாபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரவிவர்மன் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

 படுகாயம் அடைந்த கிரிதரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிரிதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்