வெப்படையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகள் கட்டமைப்பு பணி நிறுத்தம்

வெப்படையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகள் கட்டமைப்பு பணி நிறுத்தப்பட்டது.

Update: 2022-04-10 17:37 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, பொருட்காட்சி மற்றும் மின்சாரத்தால் இயங்கும் ராட்டினங்களுடன் கூடிய பொழுதுபோக்கு விளையாட்டுகள் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் குமாரபாளையம் தாலுகா வெப்படையில் அரசு அனுமதியின்றி ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகள் நிறுவப்பட்டு வருவதாக செய்தி மக்கள் தொடர்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு தெரிவித்தனர். இதையடுத்து அரசு அனுமதி பெறாத சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகள் அமைப்பதை தடுத்து நிறுத்த கலெக்டர் அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையிலான குழுவினர் அரசு அனுமதியின்றி பொழுதுபோக்கு விளையாட்டுகள் அமைப்பதற்கான கட்டமைப்பு பணிகளை தடுத்து நிறுத்தினர்.

மேலும் செய்திகள்