சேறும், சகதியுமான சாலை

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல்- வடகரை சேறும் சகதியுமான பிரதான சாலை

Update: 2022-04-10 17:34 GMT
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல்- வடகரை பிரதான சாலையில் பாலம் விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நலன் கருதி, அந்த பகுதி அருகே தற்காலிகமாக மண்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மண்பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சேறும், சகதியுமான சாலையினால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி பயணிக்க ஏதுவாக உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், மன்னம்பந்தல்.

மேலும் செய்திகள்