பெண்ணிடம் 2½ பவுன் நகை பறிப்பு

திண்டிவனம் அருகே பெண்ணிடம் 2½ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-04-10 17:22 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த கீழ்சேவூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி செல்வி (வயது 45). இவர் தளவாடியில் இருந்து நொளம்பூர் செல்லும் சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் செல்வியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதனால் நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து செல்வி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்