கோவையில் மாநில அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி

கோவையில் மாநில அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி நடந்தது.;

Update: 2022-04-10 17:18 GMT
கோவை

தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான 5-வது வீல்சேர் கூடைப்பந்து சாம்பியன் போட்டி கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் சென்னை, திருப்பத்தூர், வேலூர், கோவை ஆகிய 4 அணிகள் கலந்து கொண்டன. 

பெண்கள் பிரிவில் 2 அணிகள் பங்கேற்றன.ஆண்களுக்கான முதல் போட்டியில் கோவை அணியும், வேலூர் அணியும் மோதின. வீரர்கள் வீல்சேரில் அமர்ந்தப்படி பந்தை தட்டி சென்று கூடையில் போட்டது காண்போர்களை கவர்ந்தது. 

போட்டி முடிவில் வேலூர் அணி 33-16 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வென்றது. 2-வது போட்டியில் சென்னை அணியும் திருப்பத்தூர் அணியும் மோதின. சிறப்பாக விளையாடிய சென்னை அணி 24-2 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வென்றது.

மேலும் செய்திகள்