கார் மீது கல்வீச்சு

விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் கார் மீது கல்வீச்சு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-10 17:17 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் வீரபத்ரசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது49). இவர் ராமநாதபுரம் மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்க தலைவராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் படிக்கும் தனது பிள்ளைகளை பள்ளி முடிந்து காரில் அழைத்து வந்தாராம். 
அப்போது அந்த பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து உள்ளது.  இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இந்தநிலையில் ஜெயபாலன் நேற்று முன்தினம் இரவு தனது காரை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டாராம். நள்ளிரவில் மர்ம நபர்கள் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்து உள்ளது. வீசிய கல்லை எடுத்து காரின் மீது வைத்துவிட்டு மர்ம நபர்கள் சென்றுவிட்டார்களாம். இதுகுறித்து அவர் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்