விஷம் குடித்து பெண் தற்கொலை
சங்கராபுரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பாவனா(வயது 34). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாவனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவனா உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.