மின்கம்பி மீது உரசியதில் படுகாயம் அடைந்த மயில்

மின்கம்பி மீது உரசியதில் படுகாயம் அடைந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது;

Update: 2022-04-10 17:14 GMT
குத்தாலம்
குத்தாலம் அருகே உள்ள அரையபுரம் மெயின் ரோட்டில் மாரியம்மன் கோவில் அருகே நேற்று காலை பறந்து வந்த மயில் ஒன்று அங்குள்ள மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியதாக தெரிகிறது. இதில், அந்த மயில் மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்து கீழே விழுந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் இதுகுறித்து குத்தாலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீர்காழி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, வனக்காவலர் கலைவாணனிடம் அந்த மயிலை ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்