சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-10 17:12 GMT
தேனி: 

தேனி வடக்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில், சொத்து வரி உயர்வை கண்டித்து தேனி பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். 

அமைப்பு செயலாளர் கதிர்காமு, தேனி நகர செயலாளர் காசிமாயன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சொத்து வரி உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்