பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு
கள்ளக்குறிச்சி அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள நிறைமதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 34). இவருடைய மனைவி மகேஸ்வரி(29). சம்பவத்தன்று அதிகாலை மகேஸ்வரி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே வந்தார். அப்போது அருகில் புதரில் பதுங்கியிருந்த மர்மநபர் ஒருவர் மகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நகையை பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு ராஜா வெளியே ஓடி வந்தார். அதற்குள் அந்த மர்மநபர் மகேஸ்வரி அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.