கஞ்சா விற்ற 2 பேர் கைது
சங்கராபுரம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சங்கராபுரம் ஏரிக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் புதுப்பாலப்பட்டு மணியாறு ஓடை அருகே கஞ்சா விற்றதாக அதே ஊரை சேர்ந்த அய்யப்பன் (42) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.