பால ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அமைந்துள்ள பால ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-04-10 17:05 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அமைந்துள்ள பால ஆஞ்சநேயர் கோவிலில்  ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராமநவமி விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமபிரான் அவதரித்த தினமான ராமநவமி திருவிழா ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அமைந்துள்ள சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பால ஆஞ்சநேயர் ஆலயத்தில் ராமநவமியை முன்னிட்டு பால ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
விழாவையொட்டி காலை 7 மணி அளவில் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு பால், பழம், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதன்பின்னர் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டது. 
சிறப்பு அபிேஷகம்
இதனை தொடர்ந்து ஆலய அர்ச்சகர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில், சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் ராமநவமிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெண்ணெய், பால், துளசி உள்ளிட்டவைகளை வழங்கி ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டனர்.இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் நேற்று ராமநவமி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்