தீயணைப்பு வீரர் பலி
கம்பம் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தீயணைப்பு வீரர் பலியானார்.;
உத்தமபாளையம்:
கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் அறிவழகன் மகன் சத்தியமூர்த்தி (வயது 26). இவர் சின்னமனூர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அனுமந்தன்பட்டி அருகே வந்த போது சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றி நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது அவருடைய மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சத்தியமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.