வாணியாறு தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி பலி

வாணியாறு தடுப்பணையில் மூழ்கி தொழிலாளி பலி

Update: 2022-04-10 16:55 GMT
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வாணியாறு தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றார். பின்னர் தடுப்பணையில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற ஏ.பள்ளிப்பட்டி போலீசார் பலியான காளியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்