மதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

மதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.

Update: 2022-04-10 16:52 GMT
 கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 18-ம் ஆண்டு விளையாட்டு போட்டி கலவை சச்சிதானந்த சுவாமி தலைமையில் நடைபெற்றது. கலவை பேரூராட்சி தலைவர் கலா சதீஷ், ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்ல தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பள்ளி முதல்வர் சுகுணா வரவேற்றார். ஒலிம்பிக் ஜோதியை பள்ளியின் தாளாளர் வசந்தி ஏற்றிவைத்தார். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை அசோக் சரங்கன் பெங்களூர் டைம்ஸ் ஆப் இந்தியா ரமேஷ், சி.ஆர்.ஓ. ஸ்ரீவச்சன், சென்னை வழக்கறிஞர் மோகன் முரளி, ஆற்காடு கண்ணன் ஸ்வீட் பாஸ்கரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். அரிமா சங்கம் மணி, பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் ரங்கநாதன் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்