கள் இறக்க அனுமதி வழங்க கோரி பனையேறும் தொழிலாளர்கள் போராட்டம்

விக்கிரவாண்டி அருகே கள் இறக்க அனுமதி வழங்க கோரி பனையேறும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-10 16:40 GMT
விக்கிரவாண்டி, 

தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு பனையேரிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகத்தில் கள் இறக்கி விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி கடந்த ஜனவரி மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.   அதன்படி 80-வது நாளாக நேற்று விக்கிரவாண்டி அருகே பூரி குடிசை கிராமத்தில் கள் இறக்க அனுமதி வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். 

பாரம்பரிய உணவு

இதில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் வக்கீல் ஈசன் முருகசாமி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் மதுரை சொக்கலிங்கம், திருப்பூர் பரமேஸ்வரன், சென்னை அரி, மகளிரணி மணிமேகலை பாண்டியன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரகோத்தமன், வக்கீல்கள் நடராஜ், அனந்தராமன், சேத்பட் விவசாயிகள் ரமேஷ், அலமேலு, தொழிற் கூட்டுறவு சங்க தலைவர் சிவக்குமார், மன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் பனையேறும் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கள் இறக்கி விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், கள்ளை பாரம்பரிய உணவாகவும், ஆரோக்கிய பானமாகவும் அறிவிக்க வேண்டும், பனையேறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்