வடுவூர் அருகே கட்டக்குடியில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது.
வடுவூர் அருகே கட்டக்குடியில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது.
வடுவூர்:
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அடுத்துள்ள கட்டக்குடியில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது.இதில் திருச்சி, கோவை, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 28 அணிகள் கலந்து கொண்டன. 2 நாட்கள் நடந்த இந்த போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணியி முதல் பரிசு பெற்றது. இந்த அணிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பெற்ற ஒட்டன்சத்திரம் வெண்ணிலா கபடி அணிக்கு ரூ.40 ஆயிரத்திற்கான காசோலையும், கோப்பையையும் வழங்கப்பட்டது. 3-ம் இடத்தை கட்டக்குடி விளையாட்டுக்கழக அணிக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு திருவாரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் பொன்கோவிந்தராஜ், நிர்வாகிகள் ரவி, அசோகன் உள்பட பலர் பரிசுகளை வழங்கினர்.