லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

கம்பத்தில் லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-10 16:04 GMT
கம்பம்: 

கம்பம் பார்க் திடல் பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். 

அப்போது அப்பகுதியில் உள்ள நாடக மேடை அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவை சேர்ந்த முத்துகாமாட்சி (வயது 64) என்பவரை பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து 120 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்