பிறவி மருந்தீஸ்வரர் இந்திர விமானத்தில் வீதி உலா
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் இந்திர விமானத்தில் வீதி உலா நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இந்திர விமானத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூகத்தார், மற்றும் ஆலய செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்