இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பலி
செங்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பலி
செங்கம்
திருவண்ணாமலை திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அனிதா (வயது 35).
இவர், நீப்பத்துறை செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
செங்கம் அருகே கொட்டகுளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.