விடுதியில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் சாவு

கல்லூரி மாணவர் தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-04-10 15:16 GMT
பெங்களூரு:

  சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே பகுதியைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் பெங்களூரு வி.வி.புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.

 இதுபற்றி அறிந்த வி.வி.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரமோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்