அரக்கோணம் அருகே ரெயில் மோதி டிரைவர் பலி
அரக்கோணம் அருகே ரெயில் மோதி டிரைவர் பலியானார்.;
அரக்கோணம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அன்பரசன் (வயது 35). திருமணம் ஆகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அன்பரசன் திருவள்ளூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். திருத்தணி பகுதியில் உள்ள நண்பர்களை பார்ப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திருத்தணி - இச்சிபுத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்தவழியாக வந்த ரெயில் அன்பரசன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார்,அன்பரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.