சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-04-10 15:00 GMT
திண்டுக்கல்:
சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ராமுத்தேவர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சவரிமுத்து, பொருளாளர் செல்வக்குமார், மேற்கு பகுதி செயலாளர் யூசுப் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் நரசிம்ம வீரயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்