தக்கலை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

தக்கலை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-04-10 14:39 GMT
பத்மநாபபுரம், 
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு புங்கரையை சேர்ந்தவர் தங்கசுவாமி (வயது 69). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். அதன்பின்பு தங்கசுவாமி துக்கம் தாங்க முடியாமல் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கசுவாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்