இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது

இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது

Update: 2022-04-10 14:34 GMT
ராயக்கோட்:
கெலமங்கலம் அருகே ஜெ.காருப்பள்ளி பக்கமுள்ள ஒசபுரத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 38). வேன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் (34). நண்பர்கள். இவர்கள் 2 பேரும் பேசி கொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையே திடீர் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் சிவசங்கர், அவரது தரப்பை சேர்ந்த நாகேந்திரபாபு (27), ரவி (31), முனிராஜ் (45) ஆகியோர் சேர்ந்து குபேந்திரனை கட்டையால் தாக்கினர். இதில் காயம் அடைந்த குபேந்திரன் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
 இதுகுறித்து குபேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவசங்கர், நாகேந்திரபாபு, ரவி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். முனிராஜை தேடி வருகின்றனர். 
இதேபோல் சிவசங்கர் தனது தரப்பில் தானும், லட்சுமியம்மா (38) ஆகிய 2 பேர் காயம் அடைந்ததாக புகார் கொடுத்தார். அதன்பேரில் குபேந்திரன், கிருஷ்ணப்பா (70), எல்லம்மா (54) ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்