மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

Update: 2022-04-10 14:33 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குஞ்சப்பனை சோதனைச்சாவடிக்கு அருகே கையில் பையுடன் ஒரு நபர் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தார். 

அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், கேரடாமட்டம் பிரியா காலனியை சேர்ந்த புண்ணியமூர்த்தி (வயது 38) என்பதும், பையில் மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்