உழவர் சந்தையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு

உழவர் சந்தையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-04-10 14:14 GMT
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை எபினேசன், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்