வேடசந்தூரில் வீட்டின் மோட்டார் அறைக்குள் புகுந்த பாம்பு
வேடசந்தூரில் வீட்டின் மோட்டார் அறைக்குள் பாம்பு புகுந்தது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் தெய்வானை. இவர் இன்று காலை தனது வீட்டில் உள்ள குடிநீர் மோட்டார் அறையில் சுவிட்சை போட முயன்றார். அப்போது அவரை அங்கு பதுங்கி இருந்த பாம்பு கொத்த முயன்றது.
இது குறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலையஅலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் அறையில் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.