சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு: சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் பட்ஜெட் மீதான மேயர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-04-10 10:50 GMT
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2022-23-ம் நிதியாண்டுக்கான ‘பட்ஜெட்’, சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் கருப்பு சட்டை அணிந்தபடி வந்தனர். முன்னதாக கூட்டம் தொடங்கியதுமே, அ.தி.மு.க. உறுப்பினர் சத்யநாதன், சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ‘இதுகுறித்தான விவாதத்துக்கு அனுமதி கேட்டார். ஆனால் பிரியா, ‘இது பட்ஜெட் கூட்டம். பின்னர் நேரம் தருகிறேன்’ என்றார். இதையடுத்து சத்யநாதன் வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி வெளியேறினார். 

அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் பட்ஜெட் மீதான மேயர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மேயர் உரை முடிவடைந்ததை தொடர்ந்து அவர்கள் மீண்டும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்