பஞ்சாயத்து முன்னாள் தலைவி தீக்குளித்து தற்கொலை
கன்னியாகுமரி அருகே பஞ்சாயத்து முன்னாள் தலைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவி ஜாண் புளோரா (வயது58). இவருடைய கணவர் ஜெபமாலை. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஜெபமாலை பக்கவாத நோயால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வருகிறார். இதனால் ஜாண் புளோரா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலையில் வீட்டில் இருந்த ஜாண் புளாரோ திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகி ஜாண் புரோளா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜாண் புளோராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.